கொள்ளிடம் ஆற்றில் 26,578 கன அடி நீர்வரத்து !

0 2981

காவிரியில் ஆற்றில் நீர் வரத்து குறைந்துள்ளதால் திருச்சி முக்கொம்பில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு 26 ஆயிரத்து 578 கன அடியாகக் குறைந்தது.

வியாழன் இரவு 10 மணி நிலவரப்படி திருச்சி முக்கொம்பு அணையில் இருந்து நொடிக்கு 31 ஆயிரத்து 841 கன அடி நீர் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டது. இன்று காலை காவிரியில் நீர்வரத்து 26 ஆயிரத்து 578 கன அடியாகக் குறைந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆறு ஆகியவற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை.

தஞ்சாவூர் மாவட்டம் அணைக்கரையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உள்ள கீழணையில் இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து 55 ஆயிரம்329 கன அடியாக இருந்தது.

அணையில் இருந்து வடவாறு, வடக்கு ராஜன் கால்வாய் தெற்கு ராஜன் கால்வாய் ஆகியவற்றில் தண்ணீர் திறக்கப்படவில்லை. 55 ஆயிரம் கன அடி நீரும் கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.

வடிகால்கள் விளைநிலங்கள் ஆகியவற்றின் வழியாக வரும் நீரும் கொள்ளிடம் ஆற்றில் கலந்து மொத்தம் எண்பதாயிரம் கன அடி நீர் கடலுக்குச் செல்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments