வெள்ளம் பாதித்த பகுதிகளில் உணவு,மருந்து டெலிவெரி செய்யும் ரிமோட் மூலம் இயங்கும் சிறிய தானியங்கி படகு
சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உணவு மற்றும் மருந்து டெலிவெரி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ரிமோட் மூலம் இயங்கும் சிறிய தானியங்கி படகு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
20 கிலோ எடை வரை பொருட்கள் சுமந்து செல்லும் வகையில் தனியார் நிறுவனம் ஒன்று இந்த படகை உருவாக்கியுள்ளது.
சென்னையில் வெள்ளம் பாதித்த 16 இடங்களில் இந்த ரிமோட் படகுகளை பயன்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ள நிலையில், கே.கே.நகர் பகுதியில் முதற்கட்டமாக இந்த ரிமோட் படகின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
Comments