மழை, வெள்ள பாதிப்பை சரி செய்ய அரசும், மாநகராட்சியும் நடவடிக்கை எடுத்து வருகிறது - சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
மழை, வெள்ள பாதிப்புகளை சீராக்க தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் நடவடிக்கை எடுத்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மழை, வெள்ளத்தால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை என்பதால், நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு தொடரவேண்டும் என தலைமை நீதிபதி அமர்வில் முறையிடப்பட்டது.
அதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி, மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக செய்திகள் வருவதை குறிப்பிட்டு, தற்போதை நிலையில் அரசின் பணியில் தலையிட முடியாது என கூறி தாமாக முன்வந்து பொது நல வழக்கை எடுக்க மறுத்துவிட்டனர்.
Comments