சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த 15 நாட்கள் கூடுதல் அவகாசம் ; அமைச்சர் செந்தில்பாலாஜி

0 3894
4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த 15 நாட்கள் கூடுதல் அவகாசம்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்ட மக்கள் மின் கட்டணம் செலுத்த கூடுதலாக 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.

கோடம்பாக்கம் துணை மின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், மழை, வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவில் மின்விநியோகம் கிடைக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், முன்னெச்சரிக்கையாக நேற்று 71 இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும், அதில் 41 இடங்களில் மீண்டும் மின்விநியோகம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments