தேனாம்பேட்டையில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் இன்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. தேனாம்பேட்டை ஆஸ்டின் நகரில் சிறப்பு மருத்துவ முகாமினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் மொத்தம் 400 இடங்களில் நடைபெறும் இந்த மருத்துவ முகாமில் மழைக்கால பாதிப்புகளான காய்ச்சல், சளி, சேற்றுப்புண், வயிற்றுப்போக்கு, உடல் சோர்வு உட்பட அனைத்து விதமான உடல் சார்ந்த பாதிப்புகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கென 5-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் 10 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் முகாம்களில் இடம் பெற்றுள்ளனர்.
முகாம்களுக்கு வருபவர்களுக்கு உடல் வெப்பம், ரத்த அழுத்தம், நீரிழிவு பரிசோதனை மேற்கொள்ளப்படுவதுடன், அறிகுறி உடைய நபர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையும் எடுக்கப்படுகிறது.மேலும், முகாம்களில் கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது.
Comments