சல்மான் குர்ஷித்தின் இந்துத்துவா கருத்துக்கு குலாம் நபி ஆசாத் கண்டனம்

0 3072
சல்மான் குர்ஷித்தின் இந்துத்துவா கருத்துக்கு குலாம் நபி ஆசாத் கண்டனம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித்தின் அயோத்தி பற்றிய புத்தகத்தில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தும் இந்தியா பாகிஸ்தான் பிரிவினை தொடர்பான சல்மான் குர்ஷித்தின் கருத்து தவறானது என்று தெரிவித்துள்ளார்.

இந்துத்துவாவை ஒரு அரசியல் கொள்கையாக ஏற்காத போதும் அதனை ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்துடன் ஒப்பிடக் கூடாது என்று குலாம் நபி ஆசாத் கண்டித்துள்ளார். இதனிடையே சல்மான் குர்ஷித் மீது டெல்லியில் வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments