டாஸ்மாக் சூப்பர்வைசரிடம் ரூ.9.13 லட்சம் பறித்த வழக்கு ; 4 பேர் கைது
திருப்பூர் காசிபாளையத்தில் கத்தியை காட்டி டாஸ்மாக் சூப்பர்வைசரிடம் 9 லட்சத்து 13 ஆயிரம் பறித்துச் சென்ற வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்து 6 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மீட்டனர்.
கடந்த 1ஆம் தேதி வசூல் பணத்தை வங்கியில் செலுத்த சென்ற டாஸ்மாக் சூப்பர்வைசர் ராஜபிரகாஷை கத்தியை காட்டி பணம் பறித்து சென்ற வழக்கில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர்.
வழக்கில் தொடர்புடையதாக நெல்லை திசையன்விளையை சேர்ந்த செந்தில்குமார், பவித்ரன், மணிகண்டன், குமரேசன் ஆகிய 4 பேரை கைது செய்து பணம், 2 டூவீலர் மற்றும் பட்டா கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
Comments