இந்தியாவில் இருந்து 1500 பக்தர்கள் பாகிஸ்தானில் உள்ள புனிதத் தலங்களுக்கு பயணிக்க அனுமதி ; வெளியுறவு அமைச்சகம்

0 2589
1500 பக்தர்கள் பாகிஸ்தானில் உள்ள புனிதத் தலங்களுக்கு பயணிக்க அனுமதி

நவம்பர் 17 முதல் 26 ஆம் தேதி வரை குருநானக் ஜெயந்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 1500 பக்தர்கள் பாகிஸ்தானில் உள்ள புனிதத் தலங்களுக்கு பயணிக்க உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ச்சி, குருநானக் பிறப்பிடமாகக் கருதப்படும் நான்கனா சாகிப், கர்த்தார்புர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

ஓராண்டுக்குப் பின்னர் அண்மையில் சீக்கியர்கள் கர்த்தார்புர் செல்ல பாகிஸ்தான் அனுமதியளித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments