பிரசவித்து ஓரிரு நாட்களே ஆன தாய் மற்றும் சேயை வெள்ளம் சூழ்ந்த வீட்டிலிருந்து மீட்ட பேரிடர் மீட்பு குழு
சென்னையில் பிரசிவித்து ஓரிரு நாட்களே ஆன நிலையில், தாய் மற்றும் சேயை வெள்ளம் சூழ்ந்த வீட்டிலிருந்து பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
சென்னை சோழிங்கநல்லூர் அருகே பெரும்பாக்கம் பகுதியில் கனமழையின் காரணமாக இடுப்பளவிற்கு மழை நீர் தேங்கி, குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில் அப்பகுதியில் குழந்தை பிறந்து ஓரிரு நாட்களே ஆன நிலையில் பெண் ஒருவர் வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல் தவித்து வந்துள்ளார். தகவலறிந்து சென்ற பேரிடர் மீட்பு குழுவினர் நாற்காலியில் அமர வைத்து தாய், சேய் இருவரையும் பத்திரமாக மீட்டு வந்தனர்.
Comments