சீனாவின் வட கிழக்கு பகுதிகளைத் தாக்கிய பனிப்புயல்... "லியோவ்னிங்" மாகாணத்துக்கு ரெட் அலெர்ட்
சீனாவின் வட கிழக்கு பகுதிகளில் 3 நாட்களாக ஏற்பட்டுள்ள பனிப்புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. லியெளனிங் மாகாணத்தின் சிலப் பகுதிகளில் வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸ் வரை குறைந்துள்ளது.
ஒரு சில நகரங்களைத் தவிர்த்து பெரும்பாலான நெடுஞ்சாலைகளிலும், ரயில் நிலையங்களிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வரும் நாட்களில் பனிப்புயலின் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்பதால் அங்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் வீடுகளை கதகதப்பாக வைத்துகொள்வதற்காக நிலக்கரி இறக்குமதி அதிகரிக்கப்பட்டுள்ளது.
Comments