ஐ போன் பயனாளர்களைக் கண்காணித்ததாக, கூகுள் மீதான நடவடிக்கைக்கு இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் தடை

0 3115

ஐபோன் பயனர்களை சட்டவிரோதமாக கண்காணித்ததாக குற்றம் சாட்டப்பட்ட கூகுள் மீதான நடவடிக்கைக்கு பிரிட்டன் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதியில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் ஐ போன்களை கண்காணித்ததாக கூகுள் நிறுவனம் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் அந்நிறுவனத்திற்கு 4 புள்ளி 3 பில்லியன் அமெரிக்க டாலர் அபராதமாக விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து கூகுள் சார்பில் இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதையடுத்து கூகுளுக்கு எதிராக கொண்டு வந்த சட்ட நடவடிக்கையை ஒருமனதாக நிராகரிப்பதாக இங்கிலாந்து உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments