இல்லம் தேடி கல்வித் திட்டம்... தன்னார்வலர் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு தன்னார்வலர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. குழந்தைகளை கையாளும் திறனறி தேர்வு நடத்தப்பட வேண்டும், விருப்பு, வெறுப்புக்கு அப்பாற்பட்டவராக இருத்தல் அவசியம், பெண்களுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும், கல்விச் சான்றிதழ்களை சரிபார்த்த பின்னர் தேர்வு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஒன்று முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர் குழுவுக்கு கல்வித் தகுதியாக 12ஆம் வகுப்பும் 6 முதல் 8ஆம் வகுப்பு வரைக்குமான மாணவர் குழுவுக்கு பட்டப்படிப்பு கல்வித் தகுதியாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் எந்தக் காலகட்டத்திலும் தன்னார்வலர் இந்தப் பணிக்குச் சரியானவர் இல்லை என அறியப்பட்டால், அவர் உடனடியாக பணியிலிருந்து விடுவிக்கப்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
Comments