காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை கரையை கடக்கும்-புவியரசன்
நாளை மாலை கரையைக் கடக்கும்
சென்னை கிழக்கு, தென்கிழக்கே 430 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது
புதுச்சேரிக்கு கிழக்கே, தென்கிழக்கே 420 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது
மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை அதிகாலை, தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களை நெருங்கும்
சென்னை & அருகாமை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதி கனமழை வரையில் பெய்யக்கூடும்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் போது, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும்
புதுச்சேரி வடக்கே கடக்கும் என்பது, மாமல்லபுரம் என்றும் நாம் பொருள் கொள்ளலாம் - வானிலை மைய இயக்குநர் புவியரசன்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் எந்த பகுதியில் கரையை கடக்கும் என குறிப்பிட்டுச் சொல்ல முடியாது - வானிலை மையம்
சென்னைக்கு அதிகனமழை எச்சரிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழ்நாடு, புதுச்சேரி கடலோர பகுதிகளை நெருங்கும் என்பதால், அதி கனமழை எச்சரிக்கை
தமிழ்நாட்டின் வட கடலோர மாவட்டங்களில் அதி கனமழை வரையில் பெய்யக்கூடும் - வானிலை மையம்
காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியிருப்பதால், சென்னை மற்றும் அருகாமை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
புதுச்சேரியிலும் மிக கனமழை வரையில் பெய்யக்கூடும் - வானிலை மையம்
Comments