கோவாக்சின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு ஹாங்காங் ஒப்புதல்
இந்தியாவின் பாரத் பையோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசி பயன்பாட்டிற்கு ஹாங்காங் ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஏற்கனவே கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஸ்பெயின், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட 96 நாடுகள் இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், அந்த பட்டியலில் இப்போது ஹாங்காங்கும் சேர்ந்துள்ளது.
கோவாக்சின் தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக 78 சதவீத திறன் வாய்ந்ததாக உள்ளதால் அதனை அவசர கால பயன்பாட்டு பட்டியலில் உலக சுகாதார நிறுவனம் சென்ற வாரம் சேர்த்ததோடு, குறைந்த வருமானம் மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு கோவாக்சின் மிகவும் பொருத்தமானது என தெரிவித்தது.
Comments