இத்தாலியில் கடலில் சிக்கித் தவித்த 396 அகதிகள் பத்திரமாக மீட்பு
இத்தாலி அருகே கடலில் சிக்கித் தவித்த 396 அகதிகளை கடலோரக் காவல்படையினர் விடிய விடிய போராடி மீட்டனர்.
ஆப்ரிக்காவில் இருந்து ஐரோப்பா நோக்கி அகதிகளை ஏற்றி வந்த மீன்பிடி படகு மோசமான வானிலை காரணமாக சிசிலி தீவு அருகே ஆழம் குறைவான கடல் பகுதியில் சிக்கி கொண்டது.
இதனை கப்பலில் இருந்தபடி கவனித்த கடலோரக் காவல் படையினர், ஆழம் குறைவான பகுதிக்கு கப்பலை செலுத்த முடியாததால் சிறிய படகுகள் மூலம் விடிய விடிய மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.
கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு இத்தாலிக்கு அகதிகளாக வருவோரின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது.
Comments