நீதிபதிகள் நியமனத்தில் அரசு முழுமையாக விலகி இருக்க முடியாது ; மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு

0 3322
நீதிபதிகள் நியமனத்தில் அரசு முழுமையாக விலகி இருக்க முடியாது

நீதிபதிகள் நியமன நடவடிக்கைகளில் இருந்து மத்திய அரசு முழுமையாக விலகி இருக்க முடியாது என மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இவ்வாறு கூறிய அவர், நீதிபதிகளின் நியமனம் தாமதமாவதற்கு அரசு தரப்பே காரணம் என கூறப்படுவதற்கு இதை பதிலாக கூறினார்.

அதே நேரம் அரசுக்கும் நீதித்துறை அமைப்புக்கும் இடையே பிரச்சனை எதுவும் இல்லை என அவர் தெரிவித்தார்.

நீதிமன்றங்களில் நான்கு கோடிக்கும் அதிகமான வழங்குகள் தேங்கி உள்ளதாகவும், அதற்கு கட்டமைப்பு வசதி குறைவு உள்ளிட்டவை காரணங்கள் எனவும் கூறினார்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments