பருவ மழை குறித்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க 10 மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

0 3403

வடகிழக்கு பருவ மழை தொடர்பான நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க 10 மாவட்டங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை ஒருங்கிணைப்பாளராக நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், திருச்சி, ஈரோடு, வேலூர், ராணிப்பேட்டை, நாகை, கடலூர், மதுரை, திருவள்ளூர், அரியலூர், விருதுநகர் மாவட்டங்களுக்கு அதிகாரிகளை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நியமிக்கப்பட்ட அதிகாரிகள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நடவடிக்கைகள் மேற்கொள்வார்கள் என்றும் நிவாரணப் பணிகளை கண்காணிப்பார்கள் என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments