தடுப்பூசி செலுத்திய முதியவர்களுக்கு மீண்டும் கொரோனா ; பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துமாறு தென் கொரியா அரசு வலியுறுத்தல்
தென் கொரியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திய ஏரளமான முதியவர்களுக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டதால், அந்நாட்டு அரசு அனைவரையும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துமாறு அறிவுறுத்தி உள்ளது.
அக்டோபர் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் தினமும் 300 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 450 ஐ கடந்துள்ளது.
கடுமையாக பாதிக்கப்பட்டவர்களில் 82 சதவீதம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களாகவும் உள்ளனர். இதையடுத்து அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தி உள்ளது.
Comments