நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழையால் பாலாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு ; கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை

0 2607
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழையால் பாலாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

பாலாற்றில் நொடிக்கு 35 ஆயிரம் கன அடி வெள்ளம் பாய்வதால் கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், தமிழகத்தின் திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மாவட்டங்களில் மழை பெய்ததால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனுடன் திருமுக்கூடலில் வேகவதி, செய்யாறு ஆகியவற்றில் வரும் நீரும் சேர்ந்ததால் செங்கல்பட்டு பாலாற்றில் நொடிக்கு 35 ஆயிரம் கன அடி வெள்ளம் பாய்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பாலாற்றின் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments