கொசஸ்தலை ஆற்றின் நடுப்பகுதியில் அமைந்துள்ள ஆத்தூர் கிராமம் ... 16 குடும்பங்களைச் மீட்ட தீயணைப்புத்துறை
கொசஸ்தலை ஆற்றின் நடுவே மூன்று நாட்களாக சிக்கி தவித்து வந்த 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். செங்குன்றத்தை அடுத்த ஆத்தூர் என்ற சிறிய கிராமம் கொசஸ்தலை ஆற்றின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது.
கடந்த 3 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இந்த கிராமத்தில் உள்ள 16 குடும்பங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் வெளியேற முடியாமல் சிக்கி தவித்தனர்.
ஆற்று நீரின் வெள்ளம் மற்றும் நீரின் வேகத்தைபொருட்படுத்தாமல், இவர்களை, சிறப்பு பயிற்சி பெற்ற தீயணைப்பு துறை மீட்பு வீரர்கள், படகு மூலமாக மீட்டனர். மூன்று மணி நேர மீட்பு பணிக்கு பின்னர் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
Comments