யமுனை ஆற்றில் நிரம்பி காணப்படும் நச்சு நுரையை நீக்கும் பணியில் டெல்லி அரசு தீவிரம்
டெல்லியின் காலிந்தி கஞ்ச் பகுதியில் யமுனை ஆற்றில் நீண்ட தூரத்திற்கு ஒன்றாக நிரம்பி காணப்படும் நுரையை சிதறடித்து நீக்கும் பணியில் அம்மாநில அரசு ஈடுபட்டு வருகிறது.
யமுனையின் தூய்மையை பாதிக்கும் வகையில் நிரம்பியுள்ள நச்சு நுரையை நீக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சாத் பூஜையை முன்னிட்டு டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் சூரிய பகவானை நீர் நிலைகளில் நின்று மக்கள் வணங்குவார்கள்.
இந்நிலையில் டெல்லியில் ஆற்றில் பரவியுள்ள உள்ள நுரையை படகுகளில் சென்றும் சிதறச்செய்து நீக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், நீர் தெளிப்பான்கள் மூலம் நுரையை நீக்கும் நடவடிக்கைகளில் டெல்லி நீர்வள வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Comments