சங்ககிரியில் தனியார் வங்கி ஏடிஎம்மில் வெல்டிங் மிஷின் மூலம் கொள்ளை அடிக்க முயன்ற 3பேர் கைது

0 3566

சேலம் மாவட்டம் சங்ககிரியில் தனியார் ஏடிஎம் மையத்தில் வெல்டிங் மிஷின் மூலம் கொள்ளையடிக்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சங்ககிரியில் பழைய தபால்நிலயம் அருகில் செயல்பட்டு வந்த தனியார் வங்கி ATM இயந்திரத்தில் CCTV கேமரா விற்கு கருப்பு ஸ்பிரே அடித்து வெல்டிங் மிஷின் மூலம் பணம் கொள்ளையடிக்கும் முயற்சி நடைபெற்றது.

இதுதொடர்பாக அந்த வங்கியின் மேலாளர் அளித்த புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் 3 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து சொகுசு கார், வெல்டிங் இயந்திரங்கள் மற்றும் டூல்ஸ் உபகரணங்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments