சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்த கைதி சிறையின் ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை
சேலம் மத்திய சிறையில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்த கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான்.
தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த தனபால் என்பவன் கடந்த ஆகஸ்ட் மாதம் 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்டான். இதையடுத்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவன் கடந்த சில தினங்களாக சோர்ந்து காணப்பட்டான்.
இந்நிலையில் நேற்று சிறையில் உள்ள ஜன்னல் கம்பியில் துண்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இதையடுத்து கைதிகளை கண்காணிக்காத ஜெயில் வார்டன்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
Comments