மருத்துவமனைகளின் பாதுகாப்பு குறித்த அறிக்கை வழங்க மாநில அரசுகளுக்கு தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு

0 2509

மருத்துவமனைகளின் பாதுகாப்பு குறித்த அறிக்கையை ஒரு மாதத்திற்குள் தாக்கல் செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் நான்கு குழந்தைகள் உயிரிழந்தனர். இதனையடுத்து தாமாகவே இந்த விவகாரத்தை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அனைத்து மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.

மாவட்ட வாரியாக மருத்துவமனைகளின் பாதுகாப்பை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி அக்கடித்ததில் உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments