அமெரிக்க கப்பல்களுக்கு சவால் விடும் சீன விமானம் தாங்கிக் கப்பல்

0 7534

அமெரிக்காவுக்குப் போட்டியாக அதி உயர் தொழில்நுட்பம் கொண்ட புதிய விமானம் தாங்கிக் கப்பலை சீனா கட்டுவித்து வருகிறது.

ஷாங்காயில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ள 003 வகை நவீன விமானம் தாங்கிக் கப்பலில் செயற்கைக் கோள் புகைப்படத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. 

சீனாவிடம் ஏற்கனவே இருக்கும் லியோனிங் மற்றும் ஷான்டாங் கப்பல்கள் போலல்லாமல், அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்கள் பயன்படுத்தும் கவண் அமைப்பை 3 வது கப்பலில் சீனா பயன்படுத்தி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. புதிய கப்பல் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெள்ளோட்டம் விடப்படலாம் என்று கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments