105 வயதான இயற்கை விவசாயி பாப்பம்மாளுக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கினார் குடியரசுத் தலைவர்

0 3778

பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு மத்திய அரசால் வழங்கப்படும் பத்ம விருதுகளை 2ஆம் நாளாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 2020ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட விருதுகள் நேற்று வழங்கப்பட்ட நிலையில், இந்தாண்டில் அறிவித்த விருதுகள் இன்று வழங்கப்பட்டன.

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு அறிவித்த பத்ம விபூஷண் விருதை அவரது மகன் சரண், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் பெற்றுக்கொண்டார்.

பட்டிமன்ற நடுவரான பேராசியர் சாலமன் பாப்பையாவிற்கு குடியரசுத் தலைவர் பத்மஸ்ரீ விருதினை வழங்கினார்.

பிரபல பாடகி சித்ராவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பத்மபூஷண் விருதினை வழங்கினார்.

105 வயதான இயற்கை விவசாயி பாப்பம்மாள், கூடைப்பந்தாட்ட வீராங்கனை அனிதா ஆகியோர் பத்மஸ்ரீ விருதினை பெற்றனர். மேலும், மறைந்த சாந்தி கியர்ஸ் நிறுவனர் சுப்பிரமணியன், மருத்துவர் திருவேங்கடம் ஆகியோருக்கான பத்மஸ்ரீ விருதுகளை அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பெற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments