ஆறுதல் வெற்றியுடன் 20 ஓவர் உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது இந்திய அணி!

0 5941

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், நமீபியாவுக்கு எதிரான சூப்பர்-12 சுற்று ஆட்டத்தில், 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய நமீபியா, 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் சேர்த்தது.

தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 15 புள்ளி 2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு136 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ராகுல் 54 ரன்களும், ரோகித் சர்மா 56 ரன்களும் சேர்த்தனர்.

அரைஇறுதி வாய்ப்பை இழந்த இந்தியா தொடரை விட்டு வெளியேறியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments