நவம்பர் 29 முதல் டிசம்பர் 23 வரை குளிர்கால கூட்டத்தொடர்... நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு பரிந்துரை

0 4463

வரும் 29 ஆம் தேதி முதல் டிசம்பர் 23 ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தை நடத்தலாம் என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு பரிந்துரைத்துள்ளது. 

இந்த குளிர்கால கூட்டத்தொடரில் 20 அமர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.காஷ்மீரில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்கள், லக்கிம்பூர் வன்முறை, புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தும் போராட்டம் உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் பிரச்சனை எழுப்பும் என்பதால் குளிர்கால கூட்டத் தொடரில் அனல் பறக்கலாம் என கூறப்படுகிறது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு குளிர்கால கூட்டத் தொடர் நடத்தப்படவில்லை. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி கூட்டத்தொடர் நடத்தப்படும் என கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments