பெட்ரோல்-டீசல் மீதான வாட் வரியை குறைக்க வலியுறுத்தி டெல்லியில் முதலமைச்சர் வீடு முன்பு பாஜகவினர் தர்ணா போராட்டம்
பெட்ரோல்-டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் பாஜக எம்எல்ஏக்கள், முதலமைச்சர் கெஜ்ரிவால் வீட்டின் முன்பாக தர்ணாப் போராட்டம் நடத்தினர்.
டெல்லி பாஜக தலைவர் அதேஷ் குப்தா தலைமையில் இந்த தர்ணா நடைபெற்றது. வாட் வரியை குறைக்கும் விண்ணப்பத்துடன் கெஜ்ரிவாலை சந்திக்க வந்ததாகவும், அவர் வெளி மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் சந்திக்க முடியாமல் தர்ணா போராட்டம் நடத்தியதாகவும் அதேஷ் குப்தா தெரிவித்தார்.
பெட்ரோல் மீதான கலால் வரியில் லிட்டருக்கு 5 ரூபாயையும், டீசல் மீதான கலால் வரியில் லிட்டருக்கு 10 ரூபாயும் குறைத்து கடந்த 3 ஆம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. அதைத் தொடருந்து பாஜக ஆளும் மாநில அரசுகளும், காங்கிரஸ் ஆளும் பஞ்சாபும் வாட் வரியை குறைத்தது குறிப்பிடத்தக்கது.
Comments