சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 4 நாள் மாநாடு, மீண்டும் அதிபராகும் ஷி ஜின்பிங் ?
சீன அதிபர் ஷி ஜின்பிங்க் தொடர்ந்து 3 ஆவது முறையாக அதிபராக தேர்வு செய்யப்படுவதற்கான வரலாற்றுபூர்வ தீர்மானம், பெய்ஜிங்கில் துவங்கிய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் நிறைவேற்றப்படும் என கூறப்படுகிறது.
இன்று துவங்கிய சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் கட்சியின் மத்திய குழுவின் முழுநேர மற்றும் மாற்று உறுப்பினர்கள் சுமார் 400 பேர் கலந்து கொண்டுள்ளனர். 68 வயதான ஷி ஜின்பிங், இரண்டாவது தடவையாக சீன அதிபராக பதவியேற்று அடுத்த ஆண்டு 5 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ள நிலையில், கட்சி அவரது கட்டுப்பாட்டில் உள்ளதால் அவரே மூன்றாவது தடவையாகவும் அதிபராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.
அவருக்கு முன்பு இருந்த அதிபர் ஹு ஜின்டோ இரண்டு முறை மட்டுமே அதிபராக இருந்தார். ஆனால் தற்போது இரண்டுமுறை மட்டுமே ஒருவர் அதிபராக இருக்கலாம என்ற கட்டுப்பாட்டை கடந்த 2018 ல் கொண்டு வந்த அரசியலமைப்பு திருத்தம் மூலம் ஷி ஜிங்பின் மாற்றி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments