புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி நீர் திறப்பு
புழல் ஏரியில் இருந்து 2,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில், கரையோர பகுதியான வடபெரும்பாக்கத்தில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமான புழல் ஏரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் 2 மதகுகள் வழியாக வினாடிக்கு 2,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
அதன் காரணமாக கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், வடபெரும்பாக்கத்தில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் உணவு இன்றி தவித்து வருவதாக கூறும் வட மாநில இளைஞர்கள், தெர்மாகோல்களை படகு போல வடிவமைத்து அதன் மீது ஏறி அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.
இதனையடுத்து அப்பகுதியில் மின் மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Comments