கனமழையால் மாம்பலம் பிருந்தாவனம் சாலையில் மின் கசிவு, ஒலிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு எச்சரிக்கை

0 2570

கனமழை காரணமாக சென்னை தியாகராய நகரில் உள்ள மேட்லி சாலை சுரங்க பாதையில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் விட்டு விட்டு தொடரும் கனமழையால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்துள்ள நிலையில் நேற்று முதல் மேட்லி சாலை சுரங்கப் பாதை மூடப்பட்டு போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

இதேபோல், மேற்கு மாம்பலம் பிருந்தாவனம் சாலையில் தொடர் கனமழையால் மின் கசிவு ஏற்பட்டு மின்மாற்றியில் இருந்து புகை வெளியேறியது. இதனையடுத்து, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதோடு, ஒலிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments