சத்தீஸ்கர் மாநிலத்தில் சகவீரர்களை துப்பாக்கியால் சுட்ட சிஆர்பிஎஃப் வீரர்... 4 வீரர்கள் பலி

0 3534

சத்தீஸ்கர் மாநிலத்தில் சி.ஆர்.பி.எஃப். வீரர், ஒரு சக வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 பேர் உயிரிழந்தனர்.

மாநில எல்லையோரத்தில் அமைந்துள்ள சுக்மா மாவட்டத்தில் உள்ள சி.ஆர்.பி.எஃப். வீரர்களின் முகாமில் அதிகாலை 3.30 மணி அளவில் ரீதேஷ் ரஞ்சன் என்பவர் திடீரென சக வீரர்களை ஏகே 47 ரக துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டதில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்த வீரர்கள் அருகில் உள்ள தெலங்கானாவின் பத்ராச்சலத்தில் மருத்துவமனைக்கு ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்திய ரீதேஷ் ரஞ்சன் கைது செய்யப்பட்ட நிலையில், சிஆர்பிஎஃப் அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் தொடர்பான தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments