மேட்டூர் அணை நாளை முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு - மாவட்ட ஆட்சியர்

0 5247

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், நாளை முழு கொள்ளளவை எட்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

அணைக்கு நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 27,600 கன அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம்  117 அடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 100 கன அடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 350 கன அடி நீரும் திறக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், மேட்டூர் அணையில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், அணைக்கு நீர் வெளியேற்றத்தை விட நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால், நாளை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments