விண்வெளியில் நடந்த முதல் சீனப் பெண் என்ற பெயரைப் பெற்ற வாங் யாப்பிங்
விண்வெளியில் நடந்த முதல் சீனப் பெண் என்ற பெயரை வாங் யாப்பிங் பெற்றுள்ளார்.
சீனாவின் விண்வெளித் திட்டத்தின் ஒரு பகுதியாக டியாங்காங் விண்வெளி நிலையத்திற்கான கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்தத் திட்டத்தின் முக்கிய அதிகாரியான ஜாய் ஜிகாங் என்பவருடன் இணைந்து பணியாற்றிய பெண் வீராங்கனை வாங் யாப்பிங் விண்வெளியில் நடந்து சாதனை படைத்தார்.
இதன் மூலம் விண்வெளியில் நடந்த முதல் சீனப் பெண் என்ற பெயரையும் அவர் பெற்றுள்ளார்.
Comments