டி-20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து வெற்றி : அரையிறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா

0 6369

டி-20 உலகக்கோப்பையில், ஆப்கானிஸ்தான் அணியை நியூசிலாந்து வீழ்த்தியதன் மூலம், இந்திய அணி அரையிறுதி செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. அபு தாபியில் நடைபெற்ற சூப்பர் 12 சுற்று போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்களை மட்டுமே எடுத்தது.

அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி, 2 விக்கெட்களை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. கேப்டன் வில்லியம்சன் அதிகப்பட்சமாக 40 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

குரூப் 2 பிரிவில், பாகிஸ்தான் அணி ஏற்கனவே அரை இறுதிக்குத் தகுதி பெற்ற நிலையில், தற்போது நியூசிலாந்தும் 8 புள்ளிகளுடன் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளது. இதனால் இந்திய அணி அரைஇறுதி செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments