ஈராக் பிரதமரை குறி வைத்து ட்ரோன் தாக்குதல் : தலைநகர் பாக்தாத்தில் பலத்த பாதுகாப்பு

0 3729

ராக் பிரதமரை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட ட்ரோன் தாக்குதலைத் தொடர்ந்து தலைநகர் பாக்தாத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து ஈராக்கில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், பிரதமர் முஸ்டஃபா கதிமி-யின்  இல்லத்தின் மீது அதிகாலை ட்ரோன் மூலம் வெடிகுண்டு வீசப்பட்டது.

பாதுகாவலர்கள் பலர் காயமடைந்த நிலையில் பிரதமர் நலமுடன் உள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்துக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ட்ரோன் கைப்பற்றப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments