தொடர் கனமழை எதிரொலி, அமராவதி அணை முழு கொள்ளளவை நெருங்குவதால் உபரி நீர் திறப்பு

0 3319

தொடர் கனமழை காரணமாக கரூர் மாவட்டம் அமராவதி ஆற்றில் ஒரே நாளில் நீர்வரத்து 1309 கன அடி அதிகரித்துள்ள நிலையில், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து 90 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 87.77 அடிக்கு தண்ணீர் இருப்பதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதனால் கரூர் நகரை ஒட்டிய செட்டிப்பாளையம் தடுப்பணைக்கு நேற்று வரை 2 ஆயிரத்து 714 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் ஒரே நாளில் 1,309 கன அடி தண்ணீர் உயர்ந்து தற்போது 4023 கன அடி தண்ணீர் ஆற்றில் செல்கிறது.

கரையோர பகுதி மக்கள் ஆற்றுக்குள் இறங்கவோ, குளிப்பது, துணி துவைப்பது போன்ற செயல்களில் ஈடுபடவோ வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments