இராணிப்பேட்டை அருகே உரிய அனுமதியின்றி 15 பனை மரங்களை வெட்டிய 3 பேர் கைது

0 3933

இராணிப்பேட்டை அருகே சாலையோரம் இருந்த 15 பனை மரங்களை சட்டவிரோதமாக வெட்டி அகற்றிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நரசிங்கபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பெல் பகுதியில் ஊராட்சி சார்பாக சாலையோரம் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக இருக்கும் புதர்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

அப்போது சிலர் அங்கிருந்த 15 பனை மரங்களையும் வெட்டி வீழ்த்தியுள்ளனர். பனை மரங்களை வெட்டுவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் உரிய அனுமதி பெற வேண்டும் என்ற விதியை பின்பற்றாமல் அவற்றை வெட்டியது குறித்து தன்னார்வலர்கள் கொடுத்த தகவலின் பேரில் வந்த சிப்காட் போலீசார், ஜான் பால், தினகரன், பாலகுமார் ஆகிய மூவரை கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments