கோவையில் நகை வியாபாரியிடமிருந்து 2 கிலோ தங்கம் 7 லட்சம் பணம் வழிப்பறி, ஏழுபேரை கைது செய்தது தனிப்படை
கோவை வடவள்ளியில் நகை வியாபாரியிடமிருந்து, 2 கிலோ தங்கம், 7 லட்சம் பணம், வழிப்பறி செய்யப்பட்ட வழக்கில் 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஈரோடு சத்தியமங்கலத்தை சேர்நத சண்முகம் என்ற நகை வியாபாரி தங்க நகைகளை ஹால்மார்க் நகையாக மாற்றுவதற்காக கடந்த 30 ஆம் தேதி இரவு இரு சக்கர வாகனத்தில் வடவள்ளி - தொண்டாமுத்தூர் சாலையில் வந்துகொண்டிருந்த போது, அவரை வழிமறித்த இரு மர்மநபர்கள், கத்தியை காட்டி மிரட்டி, 2 கிலோ தங்கம் மற்றும் 7 லட்சம் பணத்தை வழிப்பறி செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பான வழக்கில் தனிப்படை அமைத்த வடவள்ளி காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபர்களை தேடி வந்தனர். இந்நிலையில், வழிப்பறி சம்பவத்தில் தொடர்புடைய ஏழுபேரை வடவள்ளி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள வழிப்பறி செய்த இருவரை தேடி வருகின்றனர்.
Comments