சென்னையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை பொதுமக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு திறந்து வைக்க உத்தரவு
சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க ஏதுவாக திறந்து வைக்க உத்தரவிட்ட பள்ளிக்கல்வித்துறை, கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உடைமைகளுடன் வந்தால் அவர்களை அனுமதிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பள்ளி வளாகத்திற்குள் தண்ணீர் தேங்காமல் இருப்பதையும், சுற்றுச்சுவர்கள், கட்டிடங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்திட தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
மின்கசிவு ஏற்படாத வகையிலும், மின் கம்பி ஆபத்தான வகையில் தொங்கிக் கொண்டிருக்காத வகையிலும் உறுதி செய்யவும் உத்தரவிட்ட பள்ளிக்கல்வித்துறை,பட்டுப்போன மரங்கள், முறிந்த நிலையில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.
Comments