பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தை கடத்தல்

0 3279

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் புதிதாகப் பிறந்த பெண் குழந்தை அடையாளம் தெரியாத ஒரு பெண்ணால் கடத்திச் செல்லப்பட்டதாக அக்குழந்தையின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மருத்துவமனையில் புதிதாகக் குழந்தையைப் பிரசவித்த அந்தத் தாய் , கழிவறை செல்ல குழந்தையைப் பார்த்துக் கொள்ளும்படி அங்கிருந்த ஒரு பெண்ணிடம் கூறிச் சென்றுள்ளார்.

திரும்பி வந்த போது குழந்தையுடன் அந்தப் பெண் மாயமாகி விட்டதாக போலீசில் அவர் புகார் தெரிவித்துள்ளார். சிசிடிவி காட்சிகளை வைத்து, குழந்தையைக் கடத்திச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments