நாடு முழுவதும் இதுவரை 108 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன - மத்திய சுகாதாரத்துறை

0 2694

நாடு முழுவதும் இதுவரை 108 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் அக்டோபர் 30 முதல் நவம்பர் 5 வரை பண்டிகைக் காலம் என்பதால் தடுப்பூசி போடுவதில் சற்று சுணக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் 2 கோடியே 42 லட்சம் டோஸ்கள் போடப்பட்டிருந்ததாகவும், ஆனால் முந்தைய வாரங்களில் இந்த எண்ணிக்கை 4 கோடிக்கும் அதிகமாக இருந்ததாகவும் சுகாதாரத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் சுமார் 16 கோடி டோஸ் மருந்துகள் கையிருப்பு இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments