மகாராஷ்டிர நகரக் கூட்டுறவு வங்கியில் முறைகேடு, 1200க்கு மேற்பட்ட கணக்குகளில் ரூ. 53.72 கோடியை முடக்கியது வருமான வரித்துறை
மகாராஷ்டிரத்தில் உள்ள நகரக் கூட்டுறவு வங்கியில் புதிய கணக்குகள் தொடங்கியதிலும், வைப்புத் தொகை செலுத்தியதிலும் முறைகேடுகள் கண்டறியப்பட்டதால் அந்தக் கணக்குகளில் உள்ள 53 கோடியே 72 லட்ச ரூபாய் முடக்கப்பட்டுள்ளது.
அந்த வங்கியின் தலைமையகம், ஒரு கிளை, வங்கியின் தலைவர் வீடு, ஒரு இயக்குநர் வீடு ஆகியவற்றில் அக்டோபர் 27 அன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது பான் கார்டு, வாடிக்கையாளர் விவரங்கள் இல்லாமல் புதிதாக 1200க்கு மேற்பட்ட கணக்குகள் தொடங்கியுள்ளதும், அதற்கான படிவங்களை வங்கி ஊழியர்களே நிரப்பிக் கையொப்பமிட்டதும் கண்டறியப்பட்டது.
இந்தக் கணக்குகள் தொடங்கிய சில நாட்களில் அவற்றில் ஒரு இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் என்னும் அளவில் பல முறை வைப்புத் தொகை செலுத்தியதும் கண்டறியப்பட்டது.
Comments