திருக்கோவிலூர் அருகே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் அணைக்கட்டில் ஆபத்தை உணராமல் ஆட்டம் போடும் இளைஞர்கள்

0 3224

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தண்ணீர் கரைபுரண்டு ஓடும் அணைக்கட்டில் ஆபத்தை உணராமல் குளிப்பது, செல்பி எடுப்பது என பலர் சேட்டைகள் செய்து வருகின்றனர்.

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே சுமார் 160 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த பழமையான அணைக்கட்டில் வேடிக்கை பார்க்கச் சென்று கடந்த காலங்களில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

இருப்பினும் மழைக்காலங்களில் அணைக்கட்டில் தண்ணீர் வெள்ளம் பெருக்கெடுக்கும்போதெல்லாம் அங்கு சென்று வேடிக்கை பார்ப்பது, குளிப்பது, புகைப்படம் எடுப்பது என ஆபத்தான செயல்களில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் இப்பகுதியை சுற்றுலாத் தலம் போல பராமரித்து, பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments