தொடர் கனமழை எதிரொலி - வேகமாக நிரம்பி வரும் மதுராந்தகம் ஏரி..!
தொடர் மழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரி வேகமாக நிரம்பி வருவதால் கடல் போல் காட்சியளிக்கிறது.
மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி 694 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. இந்த ஏரியின் மூலம் 2 ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது ஏரியில் 470 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ள நிலையில், 200 கன அடி நீர் ஏரிக்கு வந்துகொண்டிருக்கிறது.
மதுராந்தகம் சுற்றுவட்டாரத்தில் மழையளவு குறைந்தாலும் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஏரி மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் கிளியாறு உள்ளிட்டவற்றில் இருந்து வரும் உபரி நீரால் ஏரி நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது. இதன் முழு கொள்ளளவான 23.3 அடியில் தற்போது 22.8 அடியை எட்டியுள்ள நிலையில், ஏரி விரைவில் முழுமையாக நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments