அமித்ஷா தலைமையில் திருப்பதியில் நவம்பர் 14ஆம் தேதி தென் மண்டல முதலமைச்சர்கள் குழு கூட்டம்

0 2719

ஆந்திர மாநிலம் திருப்பதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் தென் மண்டல முதலமைச்சர்கள் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.

வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் முதலமைச்சர்கள், அந்தமான், லட்சத்தீவு யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்களும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாநிலங்களுக்கு இடையே சுமூக உறவை மேம்படுத்தும் வகையில் இந்தியாவில் மண்டல வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலங்களிடையே உள்ள சிக்கல்களை தீர்த்து வைப்பதற்கும், நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கும் மாநிலங்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்குவதே இம்மண்டலக் குழுக்களின் பணியாகும். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments