இங்கிலாந்தில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், போலீசாருடன் மோதல்..! 12 பேர் கைது - போலீசார் 8 பேர் காயம்
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் Bonfire Night திருவிழாவின் போது அரசுக்கு எதிரானவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது.
1605ம் ஆண்டு இங்கிலாந்து அரசரை கொன்று, நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகர்க்க தீட்டப்பட்டிருந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது ஆண்டுதோறும் Bonfire Night என கொண்டாடப்படுகிறது.
ஒரு புறம் கொண்டாட்டங்கள் நடைபெற்றாலும், மறுபுறம் அரசுக்கு எதிரானவர்கள் 1605ம் ஆண்டு அரசரை கொல்ல சதி திட்டம் தீட்டியவர்களுள் ஒருவரான கய் ஃபாக்ஸை (Guy Fawkes) போல் முகக்கவசம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் மீது அவர்கள் பட்டாசுகளை வீசியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
Comments