தூத்துக்குடியில் அனுமதியை புதுப்பிக்காமல் செயல்பட்ட கெமிக்கல் நிறுவனத்திற்கு ரூ36.26 லட்சம் அபராதம்.!
தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு பகுதியில், ஆலையை இயக்குவதற்கான அனுமதியை புதுப்பிக்காமல் செயல்பட்டு வரும் அல்காலி கெமிக்கல்ஸ் நிறுவனத்திற்கு 36லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
முத்தையாபுரத்தில் புதுப்பிக்கப்படாமல் இயங்கும் அல்காலி நிறுவனத்தின்மீது நடவடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், ஆலையை நேரில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் படி மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவை நியமித்து உத்தரவிட்டது.
ஆய்வுக்கு பின்அளிக்கப்பட்ட அறிக்கையின்அடிப்படையில் அனுமதியின்றி 453 நாட்கள் செயல்பட்ட ஆலை, 6 மாத தவணைகளாக, இழப்பீடு தொகையை செலுத்துமாறு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
Comments