பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்கக்கோரி பஞ்சாப் முதலமைச்சர் இல்லம் முன்பு போராட்டம்.... சிரோன்மணி அகாலி தளம் கட்சியினர் மீது தடியடி

0 2350

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்கக்கோரி பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி இல்லம் முன்பாக போராட்டம் நடத்திய சிரோன்மணி அகாலி தளம் கட்சியை சேர்ந்தவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினர்.

தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்த மத்திய அரசு, வாட் வரியை குறைக்க வேண்டும் என மாநில அரசுகளை கேட்டுக்கொண்டது.

ஒடிசா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் வாட் வரி குறைக்கபட்ட நிலையில், பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் அந்த வரியை குறைக்கவில்லை. இந்நிலையில், சண்டிகரில் உள்ள பஞ்சாப் முதலமைச்சரின் இல்லம் முன்பாக சிரோன்மணி அகாலிதளம் தலைவர் சுக்பிர் சிங் பாதல் தலைமையில் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து, காவல்துறையினர் அவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்திய நிலையில், தொடர்ந்து போராட்டம் நடைபெற்றதை அடுத்து தடியடி நடத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments